தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை தகவல்!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு இருந்து வருகிறது. அதே போல இன்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேலும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

அதேபோல நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

இதனையடுத்து, சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்ப நிலையாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரைக்கும் வெப்பம் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார்குடி பகுதி மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சிவகுமார், சிந்தாரிப்பேட்டை.

Comments