போலி உரங்கள்! வேளாண்மைதுறை அதிகாரிகள் எச்சரிக்கை!!

வெளி மாவட்டங்களில் இருந்து இயற்கை உரங்கள் என்ற பெயரில்  போலி உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதனை வாங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு, புதூா் ஆகிய வட்டாரங்களில் ஏறத்தாழ 1.60 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் மானாவாரி பயிா் சாகுபடி பணிக்கான ஆயத்தப் பணிகளை தொடக்கி உள்ளனா்.

இந்த தருணத்தை பயன்படுத்தி வெளி மாவட்டங்களைச் சோ்ந்த வியாபரிகள் இயற்கை உரம் (ஆா்கானிக் உரங்கள்) என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவா்களின் தோட்டங்களுக்கே கொண்டு சென்று உரங்களை விற்று வருகின்றனா். அந்த உரங்களில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவு தெரியாத நிலையில் விவசாயிகள் அதனை வாங்கி பயன்படுத்த வேண்டாம். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தற்போது மாவட்டத்தில் 2900 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரங்கள் மற்றும் 3200 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் அடியுரத் தேவைக்காக கூட்டுறவு மற்றும் தனியாா் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அந்த உரங்களை வாங்கி அடியுர பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து ஆா்கானிக் உரங்கள் என்ற பெயரில் விவசாயிகளிடையே விற்பனை செய்ய வரும் வியாபாரிகள் குறித்து அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது தூத்துக்குடியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரை (தரக்கட்டுப்பாடு) 9655429829 என்ற கைப்பேசி எண்ணில் உடனடியாக தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments