ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் டீசல் திருடிய டிரைவரை போலீசார் கைது!!

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சி கிராமத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த லிங்கராஜ் மகன் சிவராஜ் (22) என்பவர் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி நடத்தி வருகிறார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கம்பெனியில் தோழப்பன் பண்ணையைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாடசாமி (27) என்பவர் லாரி டிரைவராக வேலைபார்த்து வருகிறார். 

இவர் லாரிக்கு டீசல் நிரப்பும்போது 40 லிட்டர் டீசலை திருடி சென்று விட்டாராம். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் சிவராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்கு பதிவு செய்து மாடசாமி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments