பொது மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு! எந்த ஒரு ஆன்லைன் கேம்மையும் நம்பி உங்களுடைய வங்கி விபரங்களை கொடுக்காதீர்கள்!!

 

தொலைத்தொடர்பு சாதனமாக நம்மிடம் வந்தத கைபேசி இன்று நம்மில் பலரை பெரும் சிக்கலில் மாட்ட வைத்துக் கொண்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் நாம் கைபேசியை தொலைத் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் அளவு கடந்து தேவையற்ற செயல்களுக்கு பயன்படுத்தும் பொழுது அதனால் வரும் பிரச்சனைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்பொழுதெல்லாம் மொபைல் கேம் என்ற விளையாட்டை சிலர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவ்வாறு விளையாடும் நபர்களுக்கு விளையாட்டில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு அனுப்புகிறோம் உங்களது வங்கி கணக்கு விபரங்களை தெரிவியுங்கள் என்ற தகவல் வருகிறது.அவ்வாறு வரும் தகவல்களை நம்பி ஒரு சிலர் அவர்களது வங்கி விபரங்களை தெரிவிக்கிறார்கள். அதில் முதலில் இரண்டு மூன்று முறை குறிப்பிட்ட குறைவான தொகையை அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களது வங்கி கணக்கு விபரங்களை வைத்து மோசடியில் ஈடுபட  தொடங்குகிறார்கள். இதனால் பெரும் தொகையை இழந்து பலர் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

மேலும் சிலருக்கு மோசடி நபர்கள் சில லிங்குகளை அனுப்பி அதன் மூலமும் மோசடியில் ஈடுபட்ட வருகிறார்கள்.இதில் சிலருக்கு லோன் அப்ரூவல் ஆகியிருப்பதாக சொல்லி லிங்க் அனுப்பி விடுகிறார்கள்  அந்த லிங்கை நாம் சென்று பார்க்கும் பொழுது அவர்கள் அப்ரூவல் செய்திருக்கும் தொவைக்கு நாம் செலுத்த வேண்டிய வட்டி விகிதம் மிகவும் அதிகமாக நம்மை தலை சுற்ற வைக்கிறது. உதாரணமாக 4000 ரூபாய் லோன் அப்ரூவல் செய்தார்கள் என்றால் அதற்கு வட்டித்தொகையாக 1500 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

 இது போன்ற மோசடியான நபர்களிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கைப்பேசி என்ற சாதனம் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டதோ அதற்காக மட்டும் பயன்படுத்தினால் நாம் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க முடியும்.இது ஒரு விழிப்புணர்வு செய்தி மட்டுமே.நம்முடைய காவல்துறையினரும் சைபர் கிரைம் காவல்துறையினரும் எவ்வளவுதான் விழிப்புணர்வு செய்திகள், அறிவுரைகள் வழங்கினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிலர் தினமும் ஏதாவது ஒரு வகையில் கைபேசியினால் நிம்மதி இழந்து வருகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு "விழிப்புணர்வு" மட்டுமே.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments