தொடரை வென்றது இந்தியா!!

  

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணிக்காக கேமரூன் கிரீன் 52 ரண்களும்  ,டிம் டேவிட் 54 ரண்களும் எடுத்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதையடுத்து 187 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூரியகுமார் யாதவ் 69 ரன்களும் மற்றும் விராட் கோலி 63 ரண்களும் எடுத்து இந்திய அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments