டாஸ்மாக்கில் விற்கப்படுவது கோவில் தீர்த்தமா? சீமான் கேள்வி!!

       -MMH 

டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் கோவில் தீர்த்தமா? அதனையும் அரசு தடை செய்ய வேண்டியதுதானே முதலில் அவங்க குடும்பத்தில் உள்ள சாராயம் கம்பெனிகள் முட வேண்டும் என  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அவர் குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி மூலவர், சண்முகர், பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தார். பின்னர் தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்தினார். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்காக இல்லை.

குட்கா, கஞ்சா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என்பதை முருகன் மீது ஆணையாக ஒத்துக்கொள்கிறேன். அதனை ஓழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் அதுமட்டும் தான் போதைப்பொருட்களா?. டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் கோவில் தீர்த்தமா? அதனையும் தடை செய்ய வேண்டியதுதானே என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமிஓட்டப்பிடாரம்.

Comments