கிறிஸ்தவ ஆலயத்தில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
தட்டார்மடம் புனித தேவசகாயம் பிள்ளை ஆலயத்தில் புகுந்து நகை, வெள்ளி செயின்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் உள்ள புனித தேவசகாயம் பிள்ளை ஆலயத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்து அங்கு சொரூபத்தில்
அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் தலா 40 கிராம் கொண்ட 13 வெள்ளி செயின்களை திருடி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து ஆலய நிர்வாகி தட்டார்மடம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.
Comments