மூணார் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

    -MMH 

மூணார் தோட்ட பகுதிகளில் வசித்துவரும்  பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இலவச மடிக்கணினி, பெண்களுக்கான திருமண பண உதவி, படிக்கும் மாணவ மாணவியருக்கான  நாற்காலி மற்றும் மேசை போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மூணார் கிராம பஞ்சாயத்தில் வசிக்கும் அனைத்து பிரிவினருக்கும் இந்த இலவச உதவி திட்டங்கள் வழங்கப்படும் என்ற அதிகார பூர்வ தகவலை மூணார் கிராமபஞ்சாயத்து தலைவர் பிரவினா அர்.ரவிகுமார் அவர்கள் தெரிவித்தார். 

மேலும் கேரளா மாநிலத்தில் அனைத்து பிரிவினருக்கும் இந்த இலவசங்கள் கொடுக்க முன்வந்த முதல் பஞ்சாயத்தாக மூணார் கிராம பஞ்சாயத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments