கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

செப்டம்பர் 23-ம் தேதி தமிழக உடல் உறுப்பு தான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் கோவை காளப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய மாணவர் படை துறை, செஞ்சிலுவை - இளைஞர் பிரிவு, ரெட் ரிப்பன் கிளப், ரோட்ராக்ட் கிளப் மற்றும் கோவை அறிவியல் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைச் சேர்ந்த உடல் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை குழு சார்பில் 'வாழ்க்கைக்கு பிறகு வாழ்க்கை' என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு உரை நடைபெற்றது.

டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்கள் செயலாளர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி  தலைமையுரை ஆற்றினார். கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார்.

டாக்டர் தேவ்தாஸ் மாதவன், டாக்டர் டி. கணேசன், டாக்டர் ஆர்எம்பிஎல் ராமனாதன், டாக்டர் எஸ். யுவராஜ், டாக்டர் பாரி விஜயராகவன் மற்றும் டாக்டர் அருள்ராஜ் ராமகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து உரை நிகழ்த்தினர்.

தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. உடல் உறுப்பு தானம் செய்வதாக பலர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடல் உறுப்பு தானத்திற்கு விருப்பம் தெரிவித்தோர் விவரங்கள் டிரான்ஸ்டான் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன.

- சீனி,போத்தனூர்.

Comments