நெகமம், சின்னேரிபாளையம் கன்னிமார் கருப்புராயன் கோவில் திருவிழா கொண்டாட்டம்..!! அருமையான கிடா விருந்து!!

கோவை மாவட்டம்  பொள்ளாச்சி வட்டம் பெரிய நெகமம் பேரூராட்சி  சின்னேரிபாளையம் கிராமத்தில் அருள்மிகு கன்னிமார் கருப்பராயன் திருக்கோவில் திருவிழா ஊர் பொதுமக்கள் முன்னிலையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவில் 1000 இக்கும் மேற்பட்ட ஊர்பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு கன்னிமார் கருப்பிராயனை  வணங்கினர்.

தொடர்ந்து கோவிலுக்கு, மிகவும் பிரசித்தி பெற்ற திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க தீர்த்தம் எடுத்து வந்து தீர்த்தம் கன்னிமார் கருபுராயனுக்கு  புனித தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து திருவீதி உலா, அபிஷேக ஆராதனை, கும்பஸ்தபணம், சக்தி அழைத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், சீர்தட்டு எடுத்தல், அலங்கார தீபாராதனை ,பூஜைகள், உருவாரம் எடுத்தல், பூவோடு எடுத்தல், மஞ்சள் நீராடுதல் என விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் கிடாவெட்டி அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. திருவிழாவில் ஆண்கள் வழுக்கு மரம் ஏறும் தொன்மையான பாரம்பரிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது திமுக இளைஞரணி சார்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments