பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக தமிழ்நாடு எல்லை மீனாட்சிபுரம் காவல் சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர சோதனை!!
கோவை நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாஜக அலுவலகம் மற்றும் வாகனம் மீதுபெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து.
கோவை மாவட்டத்தில் உஷார் படுத்தப்பட்டு கோவை மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் அனைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தமிழக கேரள எல்லை மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும்
தீவிர சோதனை, கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பபட்டனர். மேலும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் வருபவர்களை நிறுத்தி பெயர்கள், வாகன எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்த பிறகே அனுமதித்து வருகின்றனர்,
அதேபோல் அம்பராம்பாளையம் மற்றும் சுங்கம் பகுதியில் வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புக்கு பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை
Comments