போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!! துவக்கி வைத்த உதவி போலீஸ் சூப்பிரண்ட் ரவிச்சந்திரன்!!

  -MMH 

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள என்.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் சைக்கிள் கிளப் துவக்க விழா போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமை தாங்கி மருத்துவ மாணவர்களின் சைக்கிள் கிளப் பேரணியை கொடியசைத்து  துவக்கி வைத்தார்.

தொடர்ந்து போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர்  தயாநிதி வரவேற்று பேசினார்.கல்லூரி தலைவர் டாக்டர் மனோகரன் முன்னிலை வகித்து  பேசினார். 

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்ட் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில்,  மாணவர்களிடையே போதைப்பழக்கம் தற்போது அதிகரிப்பது வேதனைக்குரியது.  சமுதாய சீரழிவுக்கு போதைப்பொருள் முக்கிய பங்களிக்கிறது. இவற்றை தடுக்க படிக்கும் மாணவ, மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்துவோரை கண்டறிந்து காவல்துறை கண்ட்ரோல் ரூம் தொடர்பு எண் 9498181212  தகவல் தெரிவிக்கலாம். அழைப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும்.

சிறந்த சமுதாயம் உருவாக மாணவச் செல்வங்கள் தங்கள் படிக்கும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் உடலுக்கும், மனதுக்கும், ஆரோக்கியம் அளிக்கும் விளையாட்டு சைக்கிள் ஓட்டுதல் சமுதாயப்பணி இவற்றில் கவனம் செலுத்தலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக அலுவலர் சுபிகிருஷ்ணன் இந்தியன் ரயில்வே துறையின் பயிற்சித்துறை மேலாளர் தமிழ்நாடு சைக்கிள் கிளப் அசோசியேசன் பயிற்சியாளர அருண் ஆகியோர் பங்கேற்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments