லயன்ஸ் க்ளப் சங்கத்துடன் இணைந்து பொது சேவையாற்ற மாணவிகள் தங்களை லயன்ஸ் கிளப்பில் இணைத்து கொண்ட நிகழ்வு!!

கோவை  பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் 2022 மற்றும் 2023ம் ஆண்டில் லயன்ஸ் க்ளப் சங்கத்துடன் இணைந்து பொது சேவையாற்ற மாணவிகள் தங்களை லயன்ஸ் கிளப்பில் இணைத்து கொண்ட நிகழ்வு நடைபெற்றது

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி வளாகத்தில்  கோவை மாவட்ட சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் லயன்ஸ் கிளப், மற்றும் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து 2022 மற்றும் 2023ஆம் ஆண்டில், லயன்ஸ் க்ளப் உடன் இனைத்து பொதுமக்களுக்கு அனைத்து விதமான சேவைகளை ஆற்றும் வகையில்,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

லயன்ஸ் க்ளப் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் ராம்குமார் மற்றும்  பாரதியார் பல்கலைக்கழக செயலாளர் டாக்டர் நித்யானந்தம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு லயன்ஸ் க்ளப் விதிமுறைகளை எடுத்துரைத்து உருதிமொழி வாசிக்கபட்டது இதனை

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தொடர்ந்து லயன்ஸ் க்ளப்பில் தங்களை அனைத்து கொண்டதற்கான சான்றிதழ் அனைத்து மாணவிகளுக்கும் வழங்கபட்டது, இதில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில், சேவையாற்ற மாவட்ட தலைவராக சரண்யா, செயலாளராக அபீரா, பொருளாளராக காயத்ரிக்கு பொருப்பு வழங்கபட்டது.

உறுப்பினர்களாக யாழினி, வித்யா, வர்ஷினி, தேஜவர்ஷினி, லெகானா,  கிளப் நிர்வாகிகளாக காயத்திரி, கௌசல்யா, இருவருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது, கிளப் இயக்குனர்களாக மஹிதா, முத்து பவித்ரா, என பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் மீனா, லயன்ஸ் கிளப் சார்பாக நடராஜன், டாக்டர் பழனிசாமி, என பலரும் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சீனி, போத்தனூர்.

Comments