வேலூரில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்!!
வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது வேலூர் மாவட்டத்தில் முதலவர்களின் காலை உணவு திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 48 அரசு பள்ளிகளை சேர்ந்த 3,469 மாணவ மாணவிகள் பயனடைந்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை மதுரையில் வியாழக்கிழமை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேலூர் மக்களவை உறுப்பினர் டி எம் கதீர் ஆனந்த் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கினார். அரசு தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்ததால் இதில் மாவட்ட ஆட்சியர் பெ குமரவேல் பாண்டியன்,மேயர் சுஜாதா ஆனந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எபி நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 48 அரசு பள்ளிகளை சேர்ந்த 3469மாணவர்களுக்கு இந்த காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P. இரமேஷ், வேலூர்.
Comments