கோவை SDPI கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை! வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து SDPI கட்சியினர் போராட்டம்!! நடந்தது என்ன?

கோவை உக்கடம் பகுதியில் உள்ள SDPI கட்சி  அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீரென  சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் SDPI கட்சி  அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட தகவல் அறிந்த அக்கட்சியினர் அப்பகுதியில்  திரண்டு போராட்டம் நடத்தியதால பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து  அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் SDPI கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தனது கைப்பாவையான மத்திய வருமான வரித்துறையின் மூலமாக ஏவிவிடும் ஒன்றிய பாஜக அரசின் ஏதேச்சதிகாரப் போக்கு கண்டிக்கத்தக்கது.

இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளின் மூலம் ஒரு போதும் ஜனநாயகத்தின் குரலை நசுக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இது போன்ற அராஜக அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் வருமான வரித்துறை இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சோதனை முடியும் வரை தொண்டர்கள் அலுவலகத்துக்கு வெளியிலேயே அமர்ந்து முழக்கமிட்டனர். சோதனை நிறைவடைந்த நிலையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments