பொள்ளாச்சி 2-ஆம் வார்டின் வெற்றி,16 ஆண்டுகள் போராட்டத்தில் கிடைத்த சித்தா மருத்துவமனை-பொது மக்கள் பாராட்டை பெரும் நகரமன்ற உறுப்பினர் உமா..!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் பொள்ளாச்சி வடுக பாளையத்தில் செயல்பட்டு வரும் சித்தா மருத்துவமனை, அப்பகுதி திருமதி உமா அவர்களின் கடுமையான விடா முயற்சி காரணமாக தற்போது 2 ஆம் வார்டிற்கு மருத்துவமனை கிடைக்கப்பட்டு உள்ளது.

 16 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி அவர்களின் முயற்சியில் நகராட்சி தலைவர் அனுமதியோடு நகராட்சி ஆணையர் ஒப்புதலோடு இந்த சித்த மருத்துவமனை 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பகுதியில் பொதுமக்களை பயன்பாட்டுக்கு இந்தப் பகுதியில் உள்ள நகர மன்ற உறுப்பினர் முயற்சியால் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் 2 ஆம் வார்டில் இருந்து வடுக பாளையம் செல்ல மிகவும் சிரமம் தூரமும் இருப்பதாக கூறி வேதனை உற்றனர். திருமதி உமா அவர்களில் மக்களின் குறைகளை கருத்தில் கொண்டு 16 ஆண்டுகள் போராட்டத்தில் தற்போது 2 ஆம் வார்டில் சித்தா மருத்துவமனை பெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் வாழ்துக்கள் பெற்றுள்ளது.

 நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருமதி.சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள் ரிப்பன் வெட்டி சித்தா மருத்துவ திறந்து வைத்தார் இதில் நகராட்சியின் கமிஷனர் தானு மூர்த்தி ,நகராட்சி துணைத் தலைவர் கௌதமன் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

 விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் வி பி சந்திரசேகர் ,வழக்கறிஞர் மருதராஜ் வி பி கிரி ,நகர திமுக அவைத்தலைவர் அழகப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் அப்பகுதி பொதுமக்கள் சித்தா மருத்துவர்கள் நகராட்சி ஊழியர்கள் அப்பகுதி துப்புர பணிவாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவுக்கான ஏற்பாட்டை இப்பகுதி நகரமன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி சிறப்பாக செய்திருந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிரிஷ்ணன், பொள்ளாச்சி.

Comments