வால்பாறையில் 20 அடி ஆழத்தில் தொழிலாளர்களுடன் கவிழ்ந்த டிராக்டர்!! தொழிலாளர்களின் நிலை என்ன?

கோவை மாவட்டம் வால்பாறை ஸ்டான்மோர் வுட்பிரியார் குரூப் செங்குத்து பாறை டிவிஷனில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் 0.8 என்ற பதிவு எண் கொண்ட டிராக்டர் வேலைக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் வழியில்  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  நிலை தடுமாறி சுமார் 20 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விபத்தில் இருவர் அடிபட்ட நிலையில் ஸ்டாண்ட்மோர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விபத்துக்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் காரணம் என்னவென்றால் 6 மணிக்கு பனிமூட்டம் மற்றும் வனவிலங்குகள்  தொந்தரவு உள்ள சூழ்நிலையில் 6.30am

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அளவில் வேலைக்கு ஆட்களை அமர்த்தியது. நிர்வாகம் மேலும் விபத்துக்குள்ளான வாகனத்தை இயக்கிய டிரைவர் வடமாநிலத்தை சார்ந்தவர். முறையாக பயிற்சி பெற்றிருக்கிறார். ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பது தெரியவில்லை. 

இது போல் சம்பவங்கள் இனிமேல் நடக்காத படி நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கக்கூடிய தொழிலாளிகளை காப்பாற்ற வேண்டும். மேலும்    பத்திரிக்கையாளர்களையும் பார்வையாளர்களையும்  அனுமதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விபத்தில் பாதிப்புக்கு உட்பட்டவர் களையும் இனி யாரும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையாக பேசி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என வால்பாறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

சாலைவிதிகளை மதித்தால் விபத்தில்லா பயணம் சாத்தியமே என்ற சிந்தனையோடு...

தமிழக துணை தலைமை நிருபர்,

-சுரேஷ்குமார், பொள்ளாச்சி.

Comments