ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 2.5 கோடி மதிப்பிலான 75 கேன்சர் அறுவை சிகிச்சைகள்!!

  -MMH 

கோவை ஜெம் பவுண்டேஷன், ரோட்டரி மெட்ரோபோலிஸ் ஆகியவை இணைந்து கேர்ஃபார் லைஃப்' திட்டத்தின் மூலம் கேன்சர் நவீன அறுவை சிகிச்சையை ஏழை எளிய மக்களுக்கு 2022 ஜனவரி முதல் இலவசமாக வழங்கி வருகிறது. 

வயிறு, குடல், கணையம், ஆசனவாய், கல்லீரல் போன்ற பகுதிகளில் ஆரம்ப கட்டத்தில் கண்டறியும் கேன்சருக்கு ஜெம் மருத்துவர்கள் முறையான அறுவை சிகிச்சை செய்து முற்றிலும் குணப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் 75 நபர்களுக்கு இலவச புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து முடித்துள்ளது.

இது பற்றி ஜெம் மருத்துவமனை தலைவர் பேராசிரியர் சி.பழனிவேலு கூறுகையில் "தமிழ் நாட்டில் புற்றுநோய் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வயிறு, உணவுக்குழாய் புற்றுநோய்கள் ஆண்கள் மத்தியில் அதிக அளவில் அதிகரித்து வருகின்றன. 'கேர் ஃபார்லைஃப்" திட்டத்தின் கீழ் ஆரம்பகட்ட புற்றுநோய்களுக்கு நவீன லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் சர்ஜரி முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. 

ஜெம் மருத்துவமனையிலுள்ள மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் சிகிச்சை முறைகளின் விளைவாக நோயை அதிகபட்சமாக குணப்படுத்த முடிகிறது" என்றார்.ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன்ராஜ் கேன்சர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

- சீனி,போத்தனூர்.

Comments