கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி! முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜி அவர்கள் நேரில் ஆறுதல் கூறினார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது தம்பிகள் சார்லஸ் (38), பிருதிவிராஜ் (36), தாவிது (30) உள்ளிட்ட 57 பேர் தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருகாட்டுப்பள்ளி பூண்டிமாதா பேராலயத்திற்கு சென்றனர். நேற்று முன்தினம் அவர்கள் பேராலயம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் தண்ணீரில் மூழ்கினர். அப்போது அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டனர். ஆனால் சார்லஸ், பிருதிவிராஜ், தாவிது மற்றும் பிளஸ்-2 மாணவரான ஹெர்மஸ், மீனவர்கள் பிரவின், ஈசாக் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலவைப்பட்டி கிராமத்தில் இருந்து தஞ்சாவூர் அருகே பூண்டி மாதா கோவிலுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் என மொத்தம் 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் 15 அடி பள்ளத்தில் சிக்கி மூழ்கி பரிதாபமாக பலியான செய்து அறிந்து அஇஅதிமுக இடைக்கால செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 

கழக அமைப்பு செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் மாண்புமிகு. கடம்பூர் செ.ராஜு D.Ted.,அவர்கள் இறந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

ஆளும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் 15 அடி பள்ளம் இருந்தும் முறையான அறிவிப்பு இல்லாததால் அதில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் அஇஅதிமுக தலைமை கழகத்திடம் பேசி தேவையான நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.P.மோகன் Bsc Ex MLA அவர்கள் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் உயர்திரு.P.சின்னப்பன் அவர்கள் 

ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் வீரபாண்டி.P.கோபி அவர்கள் மாவட்ட அம்மா பேரவை மாப்பிள்ளையூரணி T.பால்ராஜ்  மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments