இந்திய ஐ.டி.எம்.இ சார்பாக டிசம்பர் 8 ந்தேதி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ள மாபெரும் ஜவுளி கண்காட்சி!!

கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஜவுளி தொழில் தொடர்பான  நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு.

ஜவுளித்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீனபோக்கை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில் வரும் டிசம்பர் மாதம் 8–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை லாப நோக்கமில்லாத அமைப்பான இந்திய ஐடிஎம்இ அமைப்பு உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ‘இந்தியா ஐடிஎம்இ கண்காட்சியை இந்திய எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு,   கோவையில் நடைபெற்றது. இதில்  இந்திய ஐடிஎம்இ சொசைட்டியின் தலைவர் ஹரிசங்கர் பேசினார். இந்தியா ஐடிஎம்இ2022 கண்காட்சி உயர் தொழில்நுட்ப மிக்க ஜவுளி எந்திரங்கள், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ஜவுளித் துறைக்கான சேவைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ளதாகவும்,இது ஜவுளி துறைக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்பிற்கான "நுழைவாயில் நிகழ்ச்சியாக" இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஜவுளித்துறையை சேர்ந்த அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த கண்காட்சி  உலகத் தரம் வாய்ந்த  இந்திய எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் கிரேட்டர் நொய்டாவில் நடத்தப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதில் ஏராளமான தொழில்நுட்ப மற்றும் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சி தொழில்துறையில் உள்ள மிகப்பெரிய மற்றும் சிறந்த எந்திர உற்பத்தியாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான அதிகபட்ச சந்தை வாய்ப்புகளை வழங்கும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர்,. 6 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பெல்ஜியம், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட   நாடுகளைச்சேர்ந்த 1100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1,50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என குறிப்பிட்டார்.

- சீனி, போத்தனூர்.

Comments