டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதனைகளை செய்து கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்!!

  -MMH 

 டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த  அன்வேஷனா கிட்ஸ் பள்ளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 11பேர் 91 எண்ணிக்கையை முன்னிலை படுத்தி  பல்வேறு சாதனைகளை செய்து,சர்வதேச யுனைடெட் கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்…. 

மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் நினைவாக,கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள  அன்வேஷனா கிட்ஸ் பள்ளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 11பேர் 91 செயல்களின் மூலமாக உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,பள்ளியின் முதல்வர் பிரவீணா ராமதாஸ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐ.நா பாதுகாப்பு அமைப்பின் தேசிய இயக்குநர் டாக்டர் செந்தூர் பாண்டியன் , தேசிய செயலாளர் டாக்டர் தினேஷ் அஷ்வின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.அப்போது,   டாக்டர் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஐநா பாதுகாப்பு அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்தனர்.தொடர்ந்து இவர்களது,முன்னிலையில் ,மாணவர்கள்  பவன் குமார், 2.3 நிமிடங்களில் 91 வெவ்வேறு நாட்டுக் கொடிகளை அடையாளம் கண்டு நாட்டின் பெயரை கூறினார்.

சாஸ்திக் 91 வெவ்வேறு கார்களை 3 நிமிடங்களில் அடையாளம் கண்டு கார் பெயரை கூறினார். சஹஸ்ர சரயு 91 அபாகஸ் 3 நிமிடங்களுக்குள் சரியாக விடையளித்தார். துஷ்யந்த் 91 நிமிடங்கள் 91 வினாடிகள் இடைவிடாமல் பாடினார்.அஸ்வத் செல்வராஜ் 91 வெவ்வேறு விலங்குகள், 91 வெவ்வேறு பறவைகள் மற்றும் 91 வெவ்வேறு ஊர்வனவற்றை 5 நிமிடங்களில் கண்டறிந்து பெயரை கூறினார். .ஹவிஷ் 91  நிமிடங்கள் 91 வினாடிகள்  இடைவிடாமல் சைக்கிள் ஓட்டினார். 

ரூபன்ராஜ் வெள்ளிங்கரி இடைவிடாமல் சிலம்பம் சுழற்சியை 91 நிமிடங்கள் 91 வினாடிகள் நிகழ்த்தினார்.இதே போல மாணவிகள்,தியா 91 வெவ்வேறு செயல்பாடுகளைத் செய்திக்காட்டினார்.ரோவினா ரியா வினோத் 91  நிமிடங்கள் 91 வினாடிகள் இடைவிடாமல் பாடினார்.அனிஷ்கா செந்தில்வேலன் இடைவிடாமல் 91 நிமிடங்கள் 91 வினாடிகள் பாடினார்..ஷ்ரதா 91 நிமிடங்கள் 91 வினாடிகள்  கீபோர்ட் இடைவிடாமல் தேசிய கீதத்தை வாசித்தார்.இவ்வாறு செய்யப்பட்ட 11 மாணவ,மாணவிகளின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு, சர்வதேச யுனைடெட் கலாம் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்….

- சீனி,போத்தனூர்.

Comments