கல்லூரி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி அறிவுரை!!!

 

சென்னை லயோலா கல்லூரியில் அக்டோபர் 02 நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, மாணவர்களிடையே உரையாற்றினார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: 

"இளைஞர்களின் நேரத்தை திருடி அவர்களை சிந்திக்க விடாமல் செய்யும் வியாபார போட்டி நடக்கிறது. யார் மீது கோபம் வந்தாலும் வெளிக் காட்டாதீர்கள். ஏனென்றால் நேரம் இருக்கிறது. இன்றைக்கு நம்முடன் சண்டை போட்டவர்களை கல்லூரி முடித்த பின்னர் சந்திக்கும் போது அவர் நமக்கு நண்பனாகிறார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எல்லாவற்றுக்கும் நேரம் கொடுங்கள். உடனே எதிர்வினையாற்ற வேண்டாம். நாம் உடல்ரீதியாக வளர்வதனால் பெரிய ஆள் என நினைக்காதீர்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம், உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது.

உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம். உங்கள் மூளையை செயல்படவிடாமல் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கான போட்டி நடக்கிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக சண்டை போட வைக்கலாம். அசிங்கமாக பேச வைக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறார்கள். நம்பி விடாதீர்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

டெக்னாலஜி உங்களை திண்ண பார்க்கிறது. உங்களை பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்து எப்படி  காசு சம்பாதிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். என்னவெல்லாம் சாப்பிட வைக்கலாம். எதெல்லாம் சாப்பிட் டால் நீங்க நோயாளி ஆவீர்கள். நோயாளி ஆனா, என்ன மருந்து சாப்பிடுவீங்க. எவ்ளோ நாள் நோயாளியா உங்களை கஷ்டப்பட வைக்க முடியும், உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் என்பதில் இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது" என்று விஜய் சேதுபதி பேசினார்.

-செய்யத் காதர், குறிச்சி.

Comments