கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் காப்பு கூட்டியக்கம் இந்து திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

  -MMH 

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் காப்பு கூட்டியக்கத்தின் சார்பில் இந்து திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

கோவையில் உள்ள தமிழ்அமைப்புகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்களும் பேராசிரியர்களும், மாணவர்களும் என  200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது "தமிழ் மொழி உணர்வு" பாடல்களை பாடி முழக்கங்கள் எழுப்பினர்.

பாராளுமன்ற நிலைக்குழு கொடுத்த அறிக்கையில் , இந்தியாவை மூன்று பகுதியாக பிரித்து அதில் இந்தியை திணிக்க முயற்சிகளை துவங்கி இருப்பதாகவும், இந்த நிலைக்குழுவின்  பரிந்துரை அறிக்கையினை ஏற்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். 

மத்திய அரசு இந்த முயற்சியை  கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

- சீனி,போத்தனூர்.

Comments