கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பாக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நடைபயண பேரணி!!

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில்,அனைத்துவிதமான புற்று நோய்களுக்கும் எதிராக பல வித முன் முயற்சிகளை மேற்கொண்டு வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை  மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சி துவக்கத்தைக் குறிக்கும் வகையில்  பிங்க் வண்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டது. கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். உதவி தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் என்.பழனிசாமி, கே.எம்.சி.ஹெச் புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் டாக்டர் மேத்யூ செரியன் மற்றும் டாக்டர் ரூபா உட்பட மற்றும் பல பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பேரணியில்,மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டுவந்தவர்கள், மருத்துவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் கேஎம்சிஹெச் ஊழியர்கள் உட்பட 750க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.கடந்த 10 ஆம் தேதி,கோவை பகுதி ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து மார்பக புற்று நோய் குறித்த அனைத்து தகவல்கள்,சிகிச்சை முறை உள்ளிட்டவை அடங்கிய மை பிரெஸ்ட் ஆப் என்ற மொபைல் போன் செயலியை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

- சீனி, போத்தனூர்.

Comments