உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்!! ஆடியோ மற்றும் வீடியோக்கள் அடங்கிய ஃபிலிப் புக் வெளியீடு!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் உலக மார்பக புற்றுநோய் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த மாதத்தில் உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் குறித்தும் அதன் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வுகள்

சிகிச்சைகளும் அளிக்கப்படுவது வழக்கம் அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள பிரபல தனியார் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்ட்ராக்டிவ் ஃபிலிப் புக் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது இதனை புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவர் டாக்டர் குகன் வெளியிட்டு செய்தி அவர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசுகையில்

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  எனவே 2020 ம் ஆண்டு தேசிய புற்றுநோய் பதிவு திட்டப்படி வருகிற 2025 ம் ஆண்டில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.  அதன்படி முன்கூட்டியே மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டால் அந்த பெண்கள் மார்பகங்களையும் இழக்க வேண்டியதில்லை.  வாழ்க்கையையும் தொலைக்க வேண்டியதில்லை. ஆனால் தொடக்க நிலையில் அதை கண்டு பிடிக்கவில்லையென்றால்  பெண்கள் மார்பகத்தையும், வாழ்க்கையையும் இழக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடும்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது, நோய் கண்டறிவதற்கான பரிசோதனை,  சிகிச்சை முறைகள், மார்பக புற்று நோயை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் போன்றவை ஒருவர் கேட்பது போலவும் அதற்கு  மற்றொருவர் பதில் அளிப்பது போலவும் இந்த விழிப்புணர்வு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த புத்தகத்தை ஒருவர் வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் புரட்டும் போது அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை ஒருவர் சொல்வது போலவும், அதற்கான  காட்சிகளை நாம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவது போல் இருக்கும். அந்த அளவிற்கு சுவாரஸ்யமான உணர்வை இந்த புத்தகம்  ஏற்படுத்தும் என்பது உறுதி. மூன்று வழிகளில் மார்பக புற்றுநோயை நாம் எளிதில் கண்டறியலாம். ஒன்று விழிப்புணர்வு  தகவல்களை அறிந்து கொள்ளுதல், மற்றொன்று அது பற்றிய தகவல்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்தல். மூன்றாவது முன்கூட்டியே நோயை கண்டறியும் பரிசோதனை ஆகும்.

- சீனி,போத்தனூர்.

Comments