பல்லாவரத்தில் சுரங்கபாதையை கண்டுகொள்ளாத தாம்பரம் மாநகராட்சி!!!!

  -MMH 

சென்னை: பல்லாவரத்தில் ரயில்வே நிலையத்தின் அருகே ஈஸ்வரி நகரில் அமைந்துள்ள சுரங்கப்பாதை வெகு நாட்களாக பராமரிப்பின்றி பாழ் அடைந்து போய் கிடக்கிறது. இதனை சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி இடம் கேட்ட பொழுது இந்த சுரங்கப்பாதை ரயில்வே துறையின் கீழ் வருகிறது அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டனர்.

 ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இதனை கேட்டதற்கு இந்த சுரங்கப்பாதை 2012 ஆம் ஆண்டு மாநகராட்சி இடம் ஒப்படைக்கப்பட்டதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ரயில்வே துறை 2012லும் மற்றும் 2021 ஆம் ஆண்டு மாநகராட்சிக்கு அனுப்பியுள்ளது.

 இனிமேலாவது காலம் தாமதிக்காமல் இந்த சுரங்கப்பாதையை சீரமைக்கும் படி பொதுமக்கள் மாநகராட்சியை கேட்டுக்கொள்கின்றனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments