கோவில்பட்டி அருகே மணல் குவாரிகளில் ஆய்வு!!!

 

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி வைப்பாற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியில், அரசின் விதிமுறைகளை மீறி முறைகேடாக மணல் அள்ளப்படுவதாகவும், அதனால் மணல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணையில் நீதிபதிகள், மணல் குவாரியில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். 

இந்த வழக்கறிஞர் ஆணையம் மார்த்தாண்டம்பட்டி வைப்பாற்றில் உள்ள மணல் குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர். மணல் குவாரியில் அரசு அனுமதித்துள்ள இடத்தின் நீளம், அகலம் மற்றும் எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது? உள்ளிட்டவை குறித்து நில அளவையர் மூலமாக அளந்து குறித்துக்கொண்டனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அரசின் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை வருகின்ற 14-ந்தேதிக்குள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கறிஞர் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்த ஆய்வின்போது, கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments