தமிழக அரசின் உதவித்தொகை! இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில்  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற டிசம்பர் மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

"தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள்:

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

வருமான சான்றிதழ் :

மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல்வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு :

மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம்,

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 30.12.2022-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் உதவித் தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments