செட்டிபாளையம் பகுதியில் ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் துவக்கிய சூப்பர் சிட்டி!! புதிய வீட்டு மனைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்!!
கோவையில் கடந்த பல ஆண்டுகளாக வீட்டு மனை விற்பனையில் பொதுமக்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஜெயம் லேண்ட் கண்ணன் கோவையை சுற்றியுள்ள சரவணம்பட்டி,கோவில் பாளையம்,மத்தம்பாளையம்,காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர் என பல்வேறு இடங்களில் மலிவு விலையில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது நிறுவனம் சார்பாக அனைத்து தர மக்களும் விரும்பும் வகையில் கோவை போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் சூப்பர் சிட்டி எனும் பெயரில் சுமார் ஆறே முக்கால் ஏக்கரில் வீட்டு மனை மற்றும் வீடுகள் விற்பனைக்கான புதிய விற்பனை திட்ட துவக்க விழா நடைபெற்றது.
இதில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி மற்றும் துணை தலைவர் அரிமா செந்தில் குமார் ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை புகழ் சாந்தினி கலந்து கொண்டு க்ரீன் சிட்டி யை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த வீட்டு மனைகள் விற்பனையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்ட்டு வருவதாகவும்,வீட்டு மனைகள் மட்டுமின்றி எண்பது சதவீத வங்கி கடன் வசதியுடன் அழகிய தனி வீடுகளும் கட்டி தருவதாக ஜெயம் லேண்ட் புரோமோட்டர் உரிமையாளர் கண்ணன் தெரிவித்தார்.
குடிநீர்,மின்சாரம் என அனைத்து அடிப்படை தேவைகளும் உள்ள க்ரீன் சிட்டியில் மனை வாங்க கோவை வாழ் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனி, போத்தனூர்.
Comments