கோவையில் மாணவிகளின் புதிய கண்டுபிடிப்பு!! பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், பைராக் ஈயூவா மையம் துவக்கம்!!

  -MMH 

உயிரியல் தொழில் நுட்பம் சார்ந்த துறையை ஊக்குவிக்கும் வகையில்,மாணவிகள் கல்லூரியில் பயிலும் போதே அது தொடர்பான திறனை வளர்க்கும் விதமாக,கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்,பைராக் ஈயூவா மைய துவங்கப்பட்டது. 

முன்னதாக, கல்லூரி வளாகத்தில், பைராக் ஈயூவா மையத்தில் ஈயூவா மற்றும் இன்னோவேஷன் பெல்லோசின் முதல் குழுவின் பணியிட சேர்க்கை நடை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற துவக்க விழாவில், கல்லூரி செயலாளர் முனைவர் யசோதா தேவி, வரவேற்பு உரையாற்றினார். 

ஏபில் இந்தியா; தலைவரும்; கவுன்சில் ஆப் ப்ரெசிடெண்ட்ஸ், தலைவரும் ஆன பேராசிரியர்  முரளி, எஸ். பி. இ. டி. மற்றும் மேக் இன் இந்தியா வசதி உயிரி தொழில்நுட்பத்திற்கான எளிதாக்கல் செல், பைராக்,தலைவர், டாக்டர் மனிஷ் திவான், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நாட்டின் பத்து பைராக் ஈயூவா மையங்களில் ஒன்றான இதில், மாணவியரின் தொழில்முனைவு எண்ணங்களை ஊக்குவித்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதே இதன்  குறிக்கோள் எனவும், இந்த மையத்தில் பயிற்சி பெறும், மாணவ மாணவியர், தொழில்துறை உயிரி தொழில்நுட்பம் சார்ந்த துறைகளான கழிவு மதிப்பாக்கம், ஊட்டச்சத்து அறிவியல், உணவு தொழில்நுட்பம், சுகாதார பராமரிப்பு, என்சைமாலஜி மற்றும் பிளாஸ்டிக் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த முடியும் என தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், பி எஸ் ஜி ஸ்டேப், நிர்வாக இயக்குனர், சுரேஷ் குமார், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, முதல்வர்,முனைவர் மீனா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments