தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களை உயிர் காப்போரை காப்போம் எனும் தலைப்பில் வாக்கத்தான் நடைபெற்றது!!

  -MMH 

தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களை போற்றும் வகையில் உயிர் காப்போரை காப்போம் எனும் தலைப்பில் கோவையில் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள்,செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்ட வாக்கத்தான் நடைபெற்றது.

உடல்நிலை மிகவும் சரியில்லாத ,மற்றும் மாரடைப்பு, ,சாலை விபத்தில் படு காயமடைந்தவர்கள்,என உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வரும்  நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்து உயிர் காப்பதில்,  தீவிர சிகிச்சை பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த பிரிவில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்கள்  மற்றும் வல்லுனர்களை இணைத்து, இந்திய  தீவிர சிகிச்சை பிரிவு சங்கம்  செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சங்கத்தின் நிறுவன நாளை கொண்டாடும் விதமாகவும் மருத்துவர்களை. போற்றும் விதமாகவும் இந்திய தீவிர சிகிச்சை பிரிவு சங்கத்தின்  கோவை கிளை சார்பாக உயிர் காப்போரை காப்போம் எனும் தலைப்பில் வாக்கத்தான் கோவையில் நடைபெற்றது.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இதில் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர்.  பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.

செயலாளர் டாக்டர் சிவக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  மருத்தவர்கள் கோபிநாத், சத்தியமூர்த்தி, வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாக்கத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள்,மருந்தாளுனர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments