நம் மூத்த குடிமக்களுக்கு பொற்காலம்! வங்கி சிறப்பு திட்டம் மேலும் நீட்டிப்பு!!

 

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) நம் மூத்த குடிமக்களுக்கு (சீனியர் சிட்டிசன்களுக்கான) சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை 2023 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. இதனால், சீனியர் சிட்டிசன் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்பெற முடியும்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கிய காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தின.

ஏனெனில், சீனியர் சிட்டிசன்களில் ஏராளமானோர் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர். இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே சீனியர் சிட்டிசன்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் கூடுதலாக சுமார் 0.50% வட்டி வழங்கப்படும். இந்த வட்டிக்கும் மேல் இன்னும் கூடுதல் வட்டி வழங்குகின்றன சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும், இந்த சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றன. எஸ்பிஐ வங்கி 2023 மார்ச் வரை தனது சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை நீட்டித்திருந்தது. இந்நிலையில், தற்போது எச்டிஎஃப்சி வங்கியும் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை சீனியர் சிட்டிசன் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை நீட்டித்துள்ளது.

எச்டிஎஃப்சி வங்கி சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில், பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.75% வட்டி கிடைக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-மு.ஹரி சங்கர், கோவை வடக்கு.

Comments