ரூபாய் சரியவில்லை! டாலர் தான் உயர்கிறது!! நிர்மலா சீத்தாராமன்!!

பாகிஸ்தான், பங்கலாதேஷ் போன்ற நாடுகளின் ருபாய் மதிப்பு உயர்ந்தும் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா பேட்டி உலகம் முழுவதும் மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  சமீப காலமாக வரலாறு காணாத வீழ்ச்சி அடைத்து வருகிறது. டாலருக்கு நிகரான  இந்திய ரூபாய் 66யில் இருந்து 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றார். அவர் நேற்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக மாநாட்டில் பங்கேற்றார்.

அதன் பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை... அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நான் பார்க்கிறேன்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் தான் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில் தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன்’ என்றார்.

-செய்யத் காதர், குறிச்சி.

Comments