கருகும் பயிர்கள் வேதனையில் விவசாயிகள்!! 100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்து போய்விடும் நிலை!

    -MMH 

    கருகும் பயிர்கள் வேதனையில் விவசாயிகள் மழை நம்பியே உள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்து போய்விடும் நிலை. 100 நாள் வேலை திட்டத்தால் கூலி உயர்வு வேலை ஒழுங்காக செய்வது இல்லை  விவசாயிகள் வேதனை.

தூத்துக்குடி மாவட்டத்தில்  போதியளவு மழை இல்லை என்பதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் ராபி பருவத்திற்கான விவசாய பணிகளை கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். உளுந்து, பாசி, மக்காச்சோளம், மிளாகாய், பருத்தி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

மேலும் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்க உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தும் தெளித்துள்ளனர். பயிர்கள் வளர்ந்து வரக்கூடிய நிலையில் போதிய மழை இல்லை என்பதால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் விதைகள் முளைக்கமால் கருகி போன நிலையும் ஏற்பட்டு மீண்டும் விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யும் என்று விவசாயிகள் காத்திருந்த நிலையில் சீராக மழை பெய்யமால் பெயரளவிற்கு மழை பெய்த காரணத்தினால் செடிகள் முளைப்புதிறன் குறைந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மழை இல்லை என்பதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு ஊற்றி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் ராபி பருவத்திற்கான விவசாய பணிகளை கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். உளுந்து, பாசி, மக்காச்சோளம், மிளாகாய், பருத்தி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்க உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தும் தெளித்துள்ளனர். பயிர்கள் வளர்ந்து வரக்கூடிய நிலையில் போதிய மழை இல்லை என்பதால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் விதைகள் முளைக்கமால் கருகி போன நிலையும் ஏற்பட்டு மீண்டும் விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்யும் என்று விவசாயிகள் காத்திருந்த நிலையில் சீராக மழை பெய்யமால் பெயரளவிற்கு மழை பெய்த காரணத்தினால் செடிகள் முளைப்புதிறன் குறைந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கிய போதும் கோவில்பட்டி பகுதியில் மழை எதிர்பார்த்த அளவு இல்லை. இதானல் கருகி வரும் பயிர்களை பாதுகாக்க வேறு வழியல்லமால் விவசாயிகள் டிராக்டர் மூலமாக தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு ஊற்றி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் அதுவரை பயிர்கள் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக விவசாயிகள் விலைக்கு தண்ணீர் கொடுத்து பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர். ஏற்கனவே விதை, உரம் விலை உயர்வு, வேலை ஆட்கள் கூலி உயர்வு, உரத்தட்டுப்பாடு என பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில் போதிய மழையின்மை காரணமாக பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.  

100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் அழிந்து போய்விடும் போதிய வேலை ஆட்கள் கிடைப்பதில்லை  கூலி உயர்வு  போதிய மழை இல்லை. 

எதிர்பார்த்த மழை இல்லை என்பதால் விவசாயிகள் பயிர்களை காக்க போராடி வருகின்றனர். இனியும் மழை இல்லையென்றால் பயிர்கள் கருகி அழிந்து போய்விடும் நிலை இருப்பதாக கூறுகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Comments