புதிய வடிவம் பெறும் உலகக்கோப்பை..!! இனி 20 அணிகள் பங்கேற்கும்..இறுதி சுற்றுக்கு செல்வது மிகவும் கடினம்!!

 -MMH 

துபாய்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களின் வடிவத்தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது ஐசிசி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெ தொடர் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இதில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து 2வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

இதனை தொடர்ந்து அடுத்த டி20 உலகக்கோப்பை தொடர் 2024ம் ஆண்டு நடைபெறும். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவை இந்த தொடரை தொகுத்து வழங்கவுள்ளன.

இந்நிலையில் அடுத்த உலகக்கோப்பை தொடர் முதல் ஒட்டுமொத்த வடிவமும் மாற்றப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக 16 அணிகள் பங்கேற்கும். அதில் 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெறும். மீதமுள்ள 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெறும். அதில் ஒரு குரூப்பிற்கு 6 அணிகள் என பிரித்து டாப் 2 இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி, இறுதி சுற்றுக்கு செல்லும்.

ஆனால் இனி வரும் டி20 உலகக்கோப்பையில் 20 அணிகள் மொத்தமாக பங்கேற்கும். ஒரு குரூப்பிற்கு 5 அணிகள் என்ற வீதத்தில் மொத்தம் 4 குரூப்கள் லீக் சுற்றில் நேரடியாக களமிறங்கவுள்ளன. ஒவ்வொரு குரூப்பில் இருந்தும் டாப் 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு சூப்பர் 8 என்ற பெயரில் லீக் சுற்று போட்டிகள் நடைபெறும்.

தகுதிப்பெற்ற 8 அணிகளும் ஒரு குரூப்பிற்கு 4 அணிகள் என்ற வீதத்தில் 2 குரூப்களாக பிரிக்கப்படும். அதில் இருந்து டாப் 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு அரையிறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அதன்பின்னர் வழக்கம் போல 4 அணிகளும் அரையிறுதியில் மோதி, அதன்பின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் மூலம் பெரிய அணிகளின் ஆட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதே போல தகுதிச்சுற்றின் போது சிறிய அணிகள், பெரிய அணிகளுடன் மோதும் வாய்ப்பே இல்லாமல் வெளியேறிவிடுகிறது. இதன் மூலம் அனைத்து அணிகளுக்கும், மற்ற அணிகளுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

நாளைய வரலாறு  செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments