விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலி 4 பேர் படுகாயம் !!!

    -MMH 

   வடகிழக்கு பருவமழை தொடங்கி  தீவிரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. 

விளாத்திகுளம் அருகே பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.4 பேர் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி மாலதி (47), மற்றும் சிலர் வழக்கம்போல இன்று விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை 5 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருக்கும் போது பலத்த மழை பெய்தது. இதனால் அனைவரும் ஒரு வேப்பமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர்.

அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம், தங்கமாரி, முருகலட்சுமி, ஈஸ்வரி, ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும்  விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல்  சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து மாலதியின் உடலைக் கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய பணிக்காக சென்ற பெண் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

- முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Comments