கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளியை நூதன முறையில் 5 ரூபாய்க்கு விற்பனை செய்து விவசாயிகள் மனு...

 

-MMH

 க்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளியை கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர். தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறி ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்;. மேலும் இதன் மூலம் சேகரமாகும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிவாரண  நிதிக்கு அனுப்புவதாகக் கூறினர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக வெடிப்பு அழுகல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள். மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்." என்றார். இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

- சீனி,போத்தனூர்.

Comments