அட்வான்ஸ் காவலன் செயலி!! அனைத்து Android, iOS ஆகிய இயங்கு தளங்களில் இந்த செயலியைப் பயன்படுத்தலாம்!!

 

    -MMH 

    அட்வான்ஸ் காவலன்   செயலி!! அனைத்து Android, iOS ஆகிய இயங்கு தளங்களில் இந்த செயலியைப் பயன்படுத்தலாம். அவசர உதவிக்கு SOS பட்டனை தொட்டாலே போதும் அழைப்பவரின் இருப்பிடம் உடனே GPS மூலம் அறியப்படும்.

அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் SPMCR வசதி உள்ளது, இந்த செயலியை பயன்படுத்தி உதவி கோருபவரின் கணநேரம் கண்காணிப்பு (Real Time Traking) வசதி உள்ளது.

அழைப்பவரின் இருப்பிட தகவல்கள் மற்றும் வரைபடம் அவர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கும் தானாகவே பகிரப்படும்.

'காவலன் SOS' பட்டனில் தொட்டாலே போதும் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து ஸ்மார்ட்போன் கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பிவிடும்.

இணைய இணைப்பு இல்லாத (Data unavailable Places) இடங்களிலும் தானியங்கி SMS எச்சரிக்கை மூலமாக செயல்படும். அதிர்வு தூண்டல் (Shake Trigger) வசதியின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் இந்த வசதி உள்ளது.

1. பதிவிறக்கம் செய்த செயலியில் உங்கள் தகவல்களை பதிவு செய்யவும்.

2. சரியான தகவல்களை கவனமாக உள்ளிட்டு கணக்கை தொடங்கவும்.

3. அவசர காலத்தில் உங்களுக்கு உதவும் மூன்று பேரை தேர்ந்தெடுங்கள்.

4. அவர்களின் தொலைப்பேசி எண்ணுடன் தகவல்களை இந்த செயலியில் இணைக்கவும்.

5. அவ்வளவு தான்; உங்களை பாதுகாப்பதற்காக காவலன் SOS தயாராகி விடுவான்!!

 மக்களின் நலனுக்காக

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments