ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக முதல்வருக்கு மனு!!!

  -MMH 

கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் அலைக்கு சீல் வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கே.கணேசன் அனுப்பியுள்ள மனு:

 ஸ்டெர்லைட் ஆலை ஆதாரமற்ற குற்றச்சாட்டில் மூடப்பட்டதால், தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்கு செல்கின்ற பரிதாபநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

2022 நவம்பர் 2ம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.80,000/- கோடியில் "புதுப்பிக்கும் சக்தி துறை" Renewable energy Sectorல் அங்கு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீடு தமிழகத்திற்க வரவேண்டியது. இது போன்று பல தொழில்கள், வெளிமாநிலங்களுக்கு சென்ற விட்டதை பத்திரிகைகள் மூலமாக அறிகிறோம். 

தமிழக இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் ஏமாற்றமாக உள்ளது.

வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் பெருக்கம் கவலை தருகிறது. சுற்றுப்பற சூழல் பாதிப்பு சம்பந்தமான குற்றச்சாட்டை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட தேசீய பசுமைத் தீர்ப்பாயம், நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட்டை திறக்க தீர்ப்பு வழங்கியும், அரசியல் காரணங்களுக்காக, அரசு ஏற்க மறுப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். விளைவு தமிழகத்தில் தொழில்வளம் குறைந்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ஸ்டெர்லைட் சார்பு பல உப தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஆலையைச் சுற்றியுள்ள 11 கிராம மக்கள் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி வருகின்றனர். எனினும் அரசு செவிசாய்க்காதது வருத்தமளிக்கிறது.

தமிழக அரசு மேலும் தாமதிக்காமல் மக்களின் நியாயமான கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து ஆலையை திறக்க உத்திரவிடுமாறு பணிவுடன் கண்ணீரோடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments