தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை !!

 -MMH 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக கொலை கொள்ளை அதிகரிக்கிறது இதை மாவட்ட காவல் துறை இரும்பு காரம் கொண்டு சட்ட ஒழுங்கு பாதுகாக்க வேண்டும்.

தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன் மகன் மாரிமுத்து (38), இவர் போல்பேட்டையில் ஆட்டு இறைச்சி கடை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 3பேர், அவரை வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது 14வயது மகனும் காயம் அடைந்தார்.  அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் முகேஷ் (24) என்பவர் அங்கு ஒரு நிகழ்ச்சி தொடர்பாக பேனர் கட்டியதாகவும் அது கத்தியால்  கிழிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சண்முகவேல், தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார், மாரிமுத்துவின் மகனை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். 

இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  இன்று மாலை 4செண்ட் பகுதியில் மாரிமுத்து, அவருடைய மகனுடன் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த முகேஷ் உள்ளிட்ட சிலர் அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த மோதலின்போது முகேஷ் தரப்பை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி டவுண் டிஎஸ்பி சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாரிமுத்துவின் மகனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாரிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகேசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments