அன்னூரில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!!

   -MMH 

   கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த, காட்டம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுமார் 80 குழந்தைகள் பயின்று வருகின்றனர், இந்த பள்ளியில் நேற்று திங்கள்கிழமை மாலை 4மணியளவில் அகில இந்திய மக்கள் உரிமைகள் கழகம் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக குழந்தைகள் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்த நிகழ்ச்சியினை காட்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், அகில இந்திய பொதுச் செயலாளர் முனைவர் சுப்ரமணியம் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவன தலைவர் ஆர் கே குமார் தலைமை தாங்கி பள்ளி மாணவ மாணவிகளின் குழந்தைகள் தின விழாவை துவக்கி வைத்தனர். மேலும் கௌரவ தலைவராக கலந்து கொண்ட இச்சங்கத்தின் கிருஷ்ணசாமி, துணைதலைவர் பாலசுப்ரமணியம், மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சந்திரன் யுவர் பவுண்டேஷன் நிறுவன தலைவர் சசிகலா, அன்னூர் காவல் ஆய்வாளர் வித்யா ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற மாறுவேட போட்டியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் இந்த நிகழ்ச்சிகள் இச்சங்கத்தின் நிர்வாகிகளான ஜான், விஜயாராவ், அப்பு, மது, மணிகண்டன், ராமஜெயம், செந்தில் குமார், கணேஷ்பாபு, வழக்கறிஞர்கள் சுந்தரபாலன், சந்தோஷ், ஜெய்பிரகாஷ், என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments