திமுக அரசை கண்டித்து ஆனைமலை வளர்ந்தாய மரத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!!

   -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை மின்கரை சாலை வளர்ந்தயமரம் பகுதியில் பாஜக சார்பில் பால்விலை உயர்வு. 

மின்கட்டணம் உயர்வு மற்றும் சொத்துவரி உயர்வுகளை உயர்த்திய ஆளும் திமுக அரசை கண்டித்து ஆனைமலை மேற்கு மண்டல தலைவர் பெரிய போது வெள்ளியங்கிரி தலைமையிலும் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் மற்றும் ஆனந்த் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் திமுக அரசின் மின் கட்டணம், பால்விலை உயர்வு, சொத்து வரி, வீட்டு வரி உயர்வு, பஸ் கட்டணம் உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தமிழக துணை தலைமை நிருபர், 

-M.சுரேஷ்குமார்.  

Comments