உற்பத்தியில் லாபம் இல்லை தேயிலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் கண்ணீரில்??

   -MMH 

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலைத் தோட்ட நிறுவனங்களும் குரு விவசாயிகளும் தேயிலை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

  காலநிலை மாற்றங்கள் காரணமாக சில மாதங்கள் தேயிலை உற்பத்தி வளர்ச்சி குறைந்தே காணப்பட்டது ஆனால் இந்த வருடத்தில் நல்ல மழைப்பொழிவு  மற்றும் நல்ல காலநிலை அதிகமான தேயிலை வளர்ச்சியை கொடுத்தாலும் போதிய லாபம் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

காரணம் விவசாயிகளிடமிருந்து இலையை வாங்கி கம்பெனிகளிடம் கொடுக்கும் இடைத்தரகர்கள் தரம் குறைந்த தேயிலை இலைகள் என்று கூறி விவசாயிகளை ஏமாற்றுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஆறு மாதம் காலமாக பச்சை தேயிலை இலைகளுக்கு கிலோ 22 ரூபாயாக இருந்தது தற்பொழுது அது 18 ரூபாயாக குறைந்துள்ளது. பின்னர் மீண்டும் தற்பொழுது விலை குறைந்து 14 ரூபாயாக உள்ளது.

இந்த நிலையை மாற்ற உடனடியாக கேரளா அரசு தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்து தேயிலை உற்பத்தி விவசாயிகளை மேம்படுத்த வேண்டும் என்று தேயிலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணார்.

Comments