பணிக்கு அழைத்து வரப்பட்ட மூன்று நபர்கள் மாயம்! காவல்துறை விசாரணை!!

 

   -MMH 

  கோவெஸ்ட் பெங்கால் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான ஹரே கிருஷ்ணா படீர். இவர் கோவை சுந்தராபுரம் அடுத்த சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு  வெஸ்ட் பெங்கால் பகுதியில் இருந்து பணியாளர்களை இங்கு அழைத்து வருவது வாடிக்கையாக கொண்டுள்ளார்.     

இந்த நிலையில் வெஸ்ட் பெங்காலில் இருந்து மூன்று இளைஞர்களை அழைத்து க்கொண்டு கோவை வந்துள்ளார். 14ஆம் தேதி இரவு பத்து மணி அளவில் பணியாளர்களை அவர்கள் தங்கும் அறையில் தங்க வைத்துவிட்டு, நாளை காலையில் கம்பெனிக்கு வாருங்கள் என்று தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

மறுநாள் அவர்கள் கம்பெனிக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்களின் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர்கள் மூவரும் அங்கு இல்லை. இதனைத் தொடர்ந்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடிய பொழுது அவர்கள் மாயமானது தெரிய வந்தது. 

இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் நேற்று ஹரே கிருஷ்ணா படீர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காணாமல் போன 31 வயதான கனுமண்டி மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரையும் போத்தனூர் போலீசார் தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments