கோபிநகர தமுமுக சார்பாக பொது மருத்துவ முகாம்!

 

   -MMH 

   ஈரோடு மேற்கு மாவட்டம் கோபி நகரத்தின் கோபி 2,7, 8  வார்டு கிளைகள் மற்றும் கோவை ஒன் கேர் மெடிக்கல் சென்டர் இலவச பொது மருத்துவ ஆலோசனை  முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு கோபி நகரத் தலைவர் ஆடிட்டர் சம்சுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இரண்டாவது வார்டு தமுமுக மமக கிளை  தலைவர் பஜ்லுதீன் தலைமை தாங்கினார். முகாமை கோபி திமுக நகர செயலாளரும் கோபி நகர மன்ற தலைவர் நாகராஜ் தொடங்கி வைத்தார்.

இம் முகாமில்  வார்டு கவுன்சிலர்கள் சவுரியம்மாள் ராஜா சரோஜா, குமார சீனிவாசன்,ரேவதி, குமார சீனிவாசன் சுமையா பானு  திமுக நகர இளைஞர்  அணி நகர அமைப்பாளர் விஜய் கருப்புசாமி செயலாளர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.

இம் முகாமில் தமுமுக நகரசெயலாளர் ஹம்சர் பாஷா,மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அல்தாப்  அகமது,நகரப் பொருளாளர் கன்சூல் ரஹ்மான்,மாவட்ட தலைவர் சம்சுதீன் மமக மாவட்டச் செயலாளர் குத்புதீன் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் ஹக்கீம் கலந்து கொண்டார்கள்.

மருத்துவ முகாமை மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்  முஜிபுர் ரஹ்மான் மற்றும வார்டு கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தார்கள்.

இந்த பொது மருத்துவ முகாமில் 250 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எட்டாவது வார்டு கிளை தலைவர் அமீர் அப்பாஸ் நன்றியுரை ஆற்றினார்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-கோபி சம்சு 

ஹனீப் கோவை

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Comments