வீட்டிற்குள் தஞ்சம் பூந்த புலிக்குட்டியால் பரபரப்பு!!!

   -MMH

   கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி என்னும் காலனி நேற்று இரவு புலி உறுமும் சத்தம் போல் கேட்டது. அங்கு சென்று பார்த்த மக்கள் புலி வீட்டிற்குள் வந்திருப்பதை தெரிந்து  அதிர்ச்சடைந்தனர். பின்னர் புலியின் பின் பகுதியை பார்த்த அந்த பகுதி மக்கள் புலி தான் வீட்டிற்குள் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர்.


டார்ச் லைட் அடித்து பார்த்த பொழுது அது புலி அல்ல புலிக்குட்டி என்பது தெரிய வந்தது. காட்டிற்குள் இருந்து வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் வந்து மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

இந்த செய்தியானது உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு பரவ அனைவரும் வந்து புலிக்குட்டியை கண்டு சென்றனர். உடனடியாக  வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் அந்த புலி குட்டியை மீட்டு சென்றனர். இந்த சம்பவம் ஆனது அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன், மூணார்.

Comments