தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கம் கிளை கூட்டம்...!!!

   -MMH 

    தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கம் கிளை கூட்டம் நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடுகபாளையத்தில் நடைபெற்றது. மேலும் இதே நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் 35 ஆண்டு காலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஜெகநாதனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

 


இந்தக்கூட்டம் கிளை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கோவை மற்றும் தர்மபுரி மண்டல தலைவர் பத்மநாதன் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் அந்தோணி வளன் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.

நாளைய வரலாறு செய்திக்காக

-அலாவுதீன் ஆனைமலை.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Comments