குளிர்கால துவக்கத்திலேயே சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு!!

 

  -MMH  

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் பல ஆண்டுகளாகவே  மழை வெள்ளத்தின் காரணமாகவும், கொரோனாவின் தாக்கத்தினாலும் முடக்கப்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டன.

தற்போது பருவமழைகள் முடிந்து குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணங்களின் வரத்து அதிகரித்துள்ளது. மூணாறுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு தினங்களை கழித்து செல்லுகின்றனர்.மூணார் மாட்டுப்பட்டி,குண்டலை, பவர் ஹவுஸ், டாப்ஸ்லிப், கொழுக்குமலை இடுக்கி டேம், சதுரங்க பாறை, பள்ளிவாசல், மறையூர் காந்தளூர், பண்ணையார் டேம், சுற்றுலா தலங்களில் பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.

இந்த வருடம் டிசம்பர்,ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் வரையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments