பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பில் என்.ஜி.எம் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது..!!

 -MMH 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பில் என் ஜி எம் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் உள்ள பல்வேறு இடங்களில் NGM கல்லூரி என் எஸ் எஸ் என் சி சி மாணவ மாணவிகள் மருத்துவமனை வளாகம் முழுவதும் பினவரை பிரசவ வாடு எமர்ஜென்சி வார்டு குழந்தைகள் பிரிவு எக்ஸ்ரே பிரிவு ஸ்கேன் பிரிவு மற்றும் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ மாணவிகள், மருத்துவமனையை முழுமையாக சுத்தம் செய்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 இச்செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி எம்ஜிஎம் கல்லூரிக்கு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பில் நேரில் சென்று மருத்துவமனையில் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் என் ஜி எம் கல்லூரி முதல்வர் டாக்டர் கே முத்துக்குமரன் அவர்கள் முன்னிலையில், மாணவ மாணவிகளுக்கு  தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முருகேஷ் மாணவ மாணவிகளுக்கு அனைவரையும் வரவேற்று பேசினார்.

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார். எம் ஜி எம் கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் சோமசுந்தரம் வாழ்த்துரை வழங்கி,திரு வெள்ளை நடராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் டாக்டர் முருகேசன் செவிலியர் ஜெயலட்சுமி செவிலியர் லாவண்யா மற்றும் எம் ஜி எம் கல்லூரியில் வரலாற்று துறை உதவி பேராசிரியர் சோமசுந்தரம் மற்றும் அரசு மருத்துவமனையில் நோயாளி நலச் சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments