மூணார் அருகே முட்டுக்காட்டில் பிரியாணி அரிசி உற்பத்தி செய்து சாதித்த விவசாயிகள்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் சூரியநெல்லி அருகே உள்ள இடுக்கியின் குட்டநாடு என்று அழைக்கப்படும் முட்டுக்காட்டில் நெல் பயிரிடுவது வழக்கம்.
ஆனால் நெல் பயிரிடும் போது பல இயற்கை சீற்றங்கள் காரணமாக விளைச்சல் பெரிய அளவில் இருப்பதில்லை. அது மட்டும் அல்லாது நெல் விளைச்சலில் விவசாயிகளுக்கு பெரிய லாபம் ஒன்றும் கிடைப்பதில்லை இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பிரியாணி அரிசி விவசாயம் செய்ய முயற்சியை மேற்கொண்டனர்.
தற்பொழுது மலைப்பிரதேசமான இடுக்கியில் தொடர்ச்சியாக பிரியாணி அரிசி விவசாயம் செய்யப்பட்டு அதிகமான லாபத்திற்கு விற்கப்படுவதாகவும் விவசாயம் செய்வதில் பெருமிதம் கொள்வதாகவும் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் அல்லாது கேரளா அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களை பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வகுத்துக் கொடுக்கின்றன என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.
Comments